Ads (728x90)

கனடா -ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் பனிப்பொழிவினை அகற்றுவதற்கு 3 வாரங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் மூன்று தடவைகள் பாரியளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதிகளில் படர்ந்துள்ள பனியை அகற்றுவது மிகவும் சவால் மிக்கது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை 10 சென்றிமீற்றரும், கடந்த புதன்கிழமை 20 சென்றிமீற்றரும், நேற்று 25 சென்றிமீற்றரும் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படது.

அதிகளவு பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget