Ads (728x90)

கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆமேசான் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆயிரக் கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. 

அந்த வரிசையில் தற்போது உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களை இயக்கும் மெட்டா நிறுவனம், 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் 72,000 பணியாளர்களில் 5 சதவீதம் ஊழியர்கள் இம்மாதம் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு (AI) திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்பார்த்த அளவில் செயல்படாத ஊழியர்களை நீக்குவது என்ற நோக்கில் பணியாளர்களை விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கையின் பாதிப்பில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளடங்கமாட்டார்கள் என்றும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களே பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget