Ads (728x90)

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நன்மை செய்வது போன்று சருமத்தையும் பொலிவாக வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது. 

தேங்காயெண்ணெயில் இருக்கும் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. முடி பராமரிப்பு முதல் இயற்கை தோல் பராமரிப்பு வரையும் மற்றும் சமையலிலும் கூட பல வகையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முகத்தில் ஆங்காங்கே உருவாகும் கருப்பு திட்டுகளை போக்க உதவும். அதிக பராமரிப்பு இல்லாமல் எளிமையாக செய்ய முடியும் என்றால் அது தேங்காயெண்ணெய் கொண்டு தான். தேங்காய் எண்ணெய் பக்கவிளைவு இல்லாத சன்க்ரீன் என்று சொல்லலாம்.

சருமத்தில் எரிச்சலும், அதிக உணர்திறனும் இருந்தால் அந்த அசெளகரியத்தை துல்லியமாக போக்க தேங்காய் எண்ணெய் உதவும். தினமும் இரவில் முகத்தை கழுவி சுத்தம் செய்து முகத்துக்கு பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் இரவு தூங்கும் போது கை மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளில் இலேசாக தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டுகள் நிறம் மாறி சரும நிறத்துக்கு மாறும். 

முதுமைக் காலத்தில் வரவேண்டிய முகச்சுருக்கங்கள் இப்போது இளவயதிலேயே வந்துவிடுகிறது. சரியான பராமரிப்பின்மை, போதுமான ஊட்டச்சத்து உணவுகள் எடுத்து கொள்ளாதது, மோசமான உணவு பழக்கங்கள், செயற்கை க்ரீம் வகைகளை அதிகமாக மாற்றி பயன்படுத்துதல் போன்றவற்றால் விரைவிலேயே முகச்சுருக்கத்துக்கு ஆளாகிறார்கள்.

அவர்களது பிரச்சனையை தீர்க்கும் வகையில் தேங்காய் எண்ணேய் செயல்படுகிறது. உங்கள் நெற்றியில் கோடுகள் ஏதேனும் கண்டால் தாமதிக்காமல் இலேசாக தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்துவந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். 

சருமத்தை வறட்சியாகாமல் பார்த்துகொள்ள செய்கிறது. சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்துகொள்ள உதவுகிறது. தேங்காய் எண்ணெய் நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்களால் ஆனவை. அதனால் சருமம் வறட்சி இல்லாமல் இருக்கிறது.

வெளியில் செல்லும் போது அழுக்குகள், நச்சுகள், தூசுகள் போன்றவற்றை சருமம் எதிர்கொள்கிறது. அதை முழுவதும் தடுத்து சருமத்தை பாதுகாக்கும் பாதுகாப்பு தடையை கொண்டுள்ளது. இதனால் சருமம் மென்மையாகவும் வைக்கப்படுகிறது. 

தேங்காயெண்ணெய் ஆன் டி ஆக்ஸிடண்ட் கொண்டவை. இது ஆக்ஸிஜனேற் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட் கூறுகளுடன் சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்தை அளிக்கிறது. அதனால் வயதான அறிகுறிகளை தள்ளி போட செய்கிறது.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை பாதுகாப்பாக வெளியேற்றுகிறது. உடன் சருமத்துக்கு பொலிவும் தருகிறது. இது முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.


Post a Comment

Recent News

Recent Posts Widget