அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு கடந்த காலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது. அதனால் அவர்களை காவற்றுறையில் கூட இணைத்துக் கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. பாதாள உலகக் குழுக்களுக்கு தற்போது அரசியல் ஆதரவு இல்லாது போயுள்ளது.
இந்த குழுக்களின் தலைவர்கள் தமது செயல்பாடுகளை செய்ய முடியாதென்பதால் அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றனர்.
2024 ஆம் ஆண்டுடில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வாள்வெட்டு சம்பவங்கள் 5 உட்பட மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களில் 17 விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களில் பின்புலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொலிஸார் அல்லது இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு துறையினரின் ஆதரவு இருந்துள்ளது. இவர்களை இலகுவாக அடையாளம் காணமுடியும்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ரி56 ரக துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளோம். பொலிஸாரின் செயல்பாடுகளுக்கு தற்போது எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லை. கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது என அனைவருக்கும் தெரியும்.
தற்போது சர்வதேச ஆதரவுடன் குற்றவாளிகளை பிடிக்கும் செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று சிறைசாலைகளில் இருந்து செயல்படுத்தப்படும் குற்றச் செயல்கள் குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில சந்தேகநபர்கள் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் கடற்படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பல ஆயுதங்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. பொதுமக்கள் இவை தொடர்பில் ரகசியமான தகவலை 1997 என்ற இலக்கத்துக்கு வழங்க முடியும்.
ரி56 ரக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் 10 இலட்சம் வரை பரிசில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயல்பாடுகளுக்கு பொதுமக்களின் ஆதரவு அவசியமாகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் 13 T56 ரக துப்பாக்கிகள், 15 ரிவால்வர்கள், 21 கைத்துப்பாக்கிகள் உட்பட பல துப்பாக்கிகள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Post a Comment