Ads (728x90)

வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவி வரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரை தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் வலியுறுத்தியுள்ளார். 

வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச்செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினர். 

பொருத்தமான தருணத்தில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவரது வருகை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கில் மிக மோசமான பாதிப்பை வெள்ளை ஈ ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு வெள்ளை ஈ தாக்கம் மோசமாக இருந்ததாகவும் பின்னர் அது இல்லாமல் போயிருந்ததாகவும் தற்போது மீண்டும் வேகமாகப் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதனை வேகமாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். 

வடக்கு மாகாணத்தில் தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும், இந்த ஆண்டு ஒரு மில்லியன் தென்னங்கன்றுகளை 16 ஏக்கரில் நடுகை செய்வதற்கு திட்டமிடுவதாகவும் அதற்குரிய ஒத்துழைப்புக்களை ஆளுநரிடம் கோரியுள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget