Ads (728x90)

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளதோடு வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவை போக்குவரத்துக்கான ரிக்கெட்களை www.sailsubham.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் அல்லது 021 2224647, 0117642117 ஆகிய தொலைபேசி இலக்கத்தினூடாகவும் முற்பதிவு செய்து கொள்ளுமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது


Post a Comment

Recent News

Recent Posts Widget