தற்போது கொழும்பில் 28 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை நேற்று 31 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக இரத்தினபுரி மாவட்டத்தில் 36.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இது தவிர அனுராதபுரம் மாவட்டத்திலும், யாழ்ப்பாண மாவட்டத்திலும் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் கொழும்பு, கண்டி மற்றும் காலி மாவட்டங்களிலும் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக உடல் வியர்வையாக நீர் மற்றும் உப்புகளை இழக்கிறது. இது ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடுமையான நீரிழப்பு இதயத்தையும், மூளையையும் பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment