இதன்போது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான கொடி கம்பத்தில் பறந்த இலங்கைத் தேசியக் கொடி பல்கலைக்கழக மாணவர்களால் இறக்கப்பட்டு பின்னர் கறுப்புக் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தின் பல பாகங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட நிலையில் பிரதான வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Post a Comment