Ads (728x90)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்கள முன்றலில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பபை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கமுடியும் என சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் செய்யப்பட்டிருக்கும் சிபாரிசு தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

சட்டமா அதிபரின் இம்முடிவு தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அவரைப் பதவி விலகுமாறு கோரியும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்துக்கு முன்பாகவும் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 சட்டமா அதிபரே வீட்டுக்குச்செல்லுங்கள், லசந்தவுக்கு நீதி, கொலை செய்யப்பட்ட மஹர சிறைக்கைதிகளுக்கு நீதி வழங்கு, நீதியுடன் விளையாடும் சட்டமா அதிபர், முறையின்றி செயற்படும் சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும், சிறைச்சாலை படுகொலையாளிகளுக்கு உயிர் கொடுத்த சட்டமா அதிபர் எமக்கு வேண்டாம்' என்பன உள்ளடங்கலாக சட்டமா அதிபர் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், நீதித்துறை சுதந்திரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையை பிரதிபலிக்கக்கூடிய கேலிச்சித்திரங்களையும் ஏந்தியிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget