அதன்படி அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (EBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், கொடுப்பனவு முறையின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்ய மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
"Govpay" மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரசு நிறுவனங்களின் அனைத்து விதமான கொடுப்பனவுகளை செய்ய முடியும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மேலும் 30 அரச நிறுவனங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.
நமது நாட்டில் நாணயத் தாள்களின் பயன்பாட்டைக் குறைக்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. மக்களுக்கு மிக எளிதான அணுகலை உருவாக்க வேண்டும். இந்த GovPay தளம் அதில் மிகவும் வலுவானது.
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கலில் டிஜிட்டல் அடையாள அட்டை முக்கிய திருப்புமுனையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment