இதனடிப்படையில் முன்னறிவிப்பின்றி முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்து, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த, பாதுகாப்புப் படைகளிலிருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் இடம்பெறும் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் இராணுவத்தில் இருந்து தப்பி சென்ற முன்னைய இராணுவ அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment