Ads (728x90)

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்று முடிந்துள்ள ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஜெர்மனியின் தற்போதைய பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தோல்வியடைந்துள்ளார். ஆளுங்கட்சியான ‘சோசியல் டெமாக்கிரட்ஸ் (ஜனநாயக சமூகம் கட்சி)’ கட்சியால் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது.

இதனையடுத்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதேவேளை ஆளுங்கட்சியை பின்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. 

அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பிரைடுரிச் மெர்ஸ் ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார். ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது முன்னுரிமைக்குரிய விடயம் எனவும் தெரிவித்துள்ளார். 

 

Post a Comment

Recent News

Recent Posts Widget