Ads (728x90)

இன்று முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக 2,000 ரூபா பணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலைகள் பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னர் ரூபா 450 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த உணவு விலை ஆளும் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக நாளாந்தம் வசூலிக்கப்படும் 450 ரூபாவை 2,000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற சபை குழுவில் கடந்த 23 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்ற உணவகத்தில் காலை உணவின் விலை ரூபா 600 ஆகவும், மதிய உணவு ரூபா 1,200 ஆகவும், ஒரு கோப்பை தேநீரின் விலை 200 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget