2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்துதல் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வது குறித்த கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை குழு பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
கல்வி முறைமையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ளும் விதம் மற்றும் தற்போது அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாடங்களில் திருத்தம் மற்றும் விடயங்களை உள்வாங்குதல், கல்வி மற்றும் பாடசாலைகளில் இடம்பெற வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, ஆசிரியர் பயிற்சி மற்றும் மனப்பாங்கு விருத்தி, கல்வித் துறையில் இடம்பெற வேண்டிய தொழில் கல்வி அபிவிருத்தி, மதிப்பீட்டு முறை சீர்திருத்தம், கல்விக் கொள்கை தயாரித்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
கல்வி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படும் போது ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆகிய பிரிவுகளில் கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பாக இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், முன் பிள்ளைப் பருவம் தரம் 1 முதல் தரம் 6 வரையும், தரம் 6 இலிருந்து தரம் 9 வரையும், தரம் 10 இலிருந்து தரம் 13 வரையும் கல்வியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள் இதன்போது தெளிவுபடுத்தினர்.
"கல்வியை மாற்றுவோம் இலங்கையை மாற்றுவோம்” (Transform Education, Transform Sri Lanka) என்பதைக் கருப்பொருளாக எடுத்து மறுசீரமைப்பை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது சகலரினதும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment