Ads (728x90)

உடலில் தேவையில்லாத அதிகப்படியான கொழுப்பு சதைகளின் அடியில் தங்கி உடலை பருமனாக்குகின்றன. இவற்றை அப்படியே விடுவது பல்வேறு தீராத நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

உடலின் வயிற்றுத் தொப்பையை குறைக்க நீங்கள் உணவுக் கட்டுப்பாடுடன் கொழுப்பை குறைக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும்.

அன்னாசியை மாத்திரம் பயன்படுத்தி வயிற்றுச் சதையை விரைவாக குறைக்கலாம். பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

இரவு அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை குறையும்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget