Ads (728x90)

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான முன்மொழிவு ஒன்று ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. தனிப்பட்ட உறுப்பினர் ஒருவரின் முன்மொழிவாக இது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒரு கருத்தைக் கொண்டிருந்தது என்றும், அதை சமூகத்திற்கு இழைக்கும் துரோகமாக மாற்றிவிட்டது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சேதமடைந்துள்ளதாகவும், அதை மீட்டெடுக்கவே இந்த முன்மொழிவை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நேரத்தில் மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் பணியாற்றி வருவதால், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே அவசியமாகியுள்ளதாக ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

அந்த சமூக எதிர்ப்பை ஒழிக்கவே நான் இந்த முன்மொழிவை முன்வைக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமக்கென ஒரு பிரச்சனையை உருவாக்குகிறோமா அல்லது சமூகத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறோமா என்ற நோக்கத்துடன்தான் இது முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget