படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கிறோம்.
லசந்தவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
நீதிமன்றம், சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதியை நிலைநாட்டுவதற்காகவே செயற்படுகிறது. அதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும் திணைக்களம் ஒரே போக்கில் செயற்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
தேவையேற்பட்டால் லசந்த விக்ரமதுங்க சார்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும், நீதியை நிலைநாட்ட எடுக்கக்கூடிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு இதுதான். இன்றைய எமது நிலைப்பாடும் அதுதான்.
இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் அவளுக்கு உறுதியளிக்கிறேன். அதற்குத் தேவையான சுதந்திரம் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Post a Comment