Ads (728x90)

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று காலை ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது சரித் அசலங்கவின் 127 ஓட்டங்களுடன் 46 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை எடுத்தது.

215 ஓட்ட இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது 33.5 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இலங்கை 1:0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியானது கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget