Ads (728x90)

ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் விடுவிக்காவிட்டால் காசாவில் போர் வெடிக்கும் என்னும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல- ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

இஸ்ரேல் தங்கள் நாட்டுச் சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதற்கு இணக்கம் தெரிவித்தது.

சனிக்கிழமை அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்யாவிட்டால் காசாவில் போர் வெடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் காசாவில் மீண்டும் ஒரு பெரிய சோகத்திற்கு வழிவகுக்கும் விரோதப் போக்கைத் தாம் தவிர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டாரெஸ் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் அடுத்த சனிக்கிழமை பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தங்கள் உறுதிமொழிகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget