Ads (728x90)

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும், கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் இவர்களமு தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை அதிபரால் நினைவுப் பரிசொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனவும், யாழ்ப்பாண மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று மதியம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த பிரதமர், ஆசிரியர் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்ததோடு, அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget