Ads (728x90)

இலங்கையின் மன்னாரிலுள்ள தமது காற்றாலை மின்சக்தி திட்டத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கெளதம் அதானியின் "அதானி குழும அதானி கிறீன் எனர்ஜி" தீர்மானித்துள்ளது.

காற்றாலை மின் திட்டத்தில் ஒப்புதல்களைப் பெற்றிருந்தாலும், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் உயர் நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட தாமதங்களை நிறுவனம் காரணம் காட்டியே இதனை தெரிவித்துள்ளது.

தமது பணிப்பாளர் சபையின் முடிவை இலங்கைக்கு அதானி கிறீன் எனர்ஜி அறிவித்துள்ளதாக அதானி குழுமத்துக்கான பேச்சாளரொருவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையுடன் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதானி குழுமம், இலங்கை அரசாங்கம் விரும்பினால் எதிர்கால கூட்டிணைவுக்கு தயாராகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget