Ads (728x90)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும், அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்றைய அமர்வில் சபையில் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தில் குறிப்பாக பிரிவுகள் 2 மற்றும் 3 அரசியலமைப்பின் பிரிவு 12(1) உடன் முரணாக இருப்பதால், அரசியலமைப்பின் பிரிவு 84(2) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி பிரதமர் ஹரிணி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நாடாளுமன்றம் இன்று கூடிய போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவை இன்றைய தினம் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget