இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு அலுவலகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு வழி வகைகள் எதுவும் இருக்கிறதா? என யாழ்ப்பாண மாவட்ட செயலக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் ஜனாதிபதி வினவினார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட பிரதீபன், எமது மாவட்ட செயலகத்தில் இடப்பற்றாக்குறை இருக்கிறது. இருப்பினும் வடக்கு மக்களுக்கு தேவையான ஒரு விடயமாக கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுவதால் அதற்கான இடத்தை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கலாம் என அரச அதிபர் தெரிவித்தார்.
Post a Comment