Ads (728x90)

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை  அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 14,45,549 பேர் கொண்ட பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் இப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் பட்டியலில் சேர்த்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை இதில் உள்வாங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது பூட்டான், பர்மா, கியூபா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரியா, எத்தியோப்பியா, ஹாங்காங், இந்தியா, ஈரான், லாவோஸ், பாகிஸ்தான், மக்கள் சீனக் குடியரசு, ரஷ்யா, சோமாலியா மற்றும் வெனிசுலா ஆகிய 15 நாடுகள் ஒத்துழைக்காதவை என அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு கருதுகிறது. 

போஸ்னியா-ஹெர்ஸகோவினா, புர்கினா பாசோ, கம்போடியா, காபோன், காம்பியா, ஈராக், ஜமைக்கா, நிகரகுவா, தெற்கு சூடான், செயின்ட் லூசியா மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகள் இணங்காத அபாயத்தில் இருப்பதாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க பிரிவு கருதுகிறது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget