திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ, நேற்று புதன்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கொன்றுக்காக அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல முற்பட்ட வேளையில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்:
இது மிகப்பாரதூரமான விடயம். இதுகுறித்த பொறுப்பை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. மிகவலுவான பாதுகாப்புக்கு மத்தியில் தான் கணேமுல்ல சஞ்சீவ அழைத்து வரப்பட்டார். இருப்பினும் தற்போது நீதிமன்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடி இப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியிருக்கிறது. இங்கு பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவர் மாத்திரமன்றி மேலும் பல அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். ஆகவே இச்சம்பவம் தொடர்பில் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதுடன் இதுகுறித்து வெகுவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Post a Comment