யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்திற்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே அந்த முடிவை செயல்படுத்த தேவையான பணியாளர்களை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அந்த அமைச்சரவை முடிவு பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பொது சேவை ஆணைக்குழு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் அதற்கான தீர்மானத்தை அறிவிக்கும்.
அந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னர் இந்த அலுவலகத்தை 24 மணி நேரமும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Post a Comment