Ads (728x90)

பாதாள உலக செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 10வது நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களைப் பாதுகாப்பதற்காக இருக்கும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள் உள்ள சில நபர்கள் வரை பாதாள உலகம் பரவியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதாள உலக கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை நாட்டிற்குள் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் பெரும் அதிர்வலையை ஏற்பட்டுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget