Ads (728x90)

உலகளாவிய ரீதியிலுள்ள USAID என கூறப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி  வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ள USAID, தமது அனைத்து பணியாளர்களும் அமெரிக்காவுக்கு மீளத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைத் தவிர, USAID இன் ஏனைய அனைத்து நேரடி மற்றும் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களும் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்காவிற்கு வெளியே பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கான ஒரு திட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் கீழ் அவர்கள் 30 நாட்களுக்குள் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் USAID தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget