Ads (728x90)

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறையை அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

 வர்த்தகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதை தொடர்ந்து கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை ஒத்திவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 2ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படாது என கனடா நாட்டின் நிதித்துறை அமைச்சர் டொமினிக் லி பிளாங்க் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget