இந்த ஆண்டிற்கான 500,000 ஆவது சுற்றுலாப் பயணியை இலங்கை பெப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் வரவேற்றதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் 37,768 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment