அவரது கூற்றுப்படி 2016 ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 14 விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி, ஊழல் எதிர்ப்பு, அரசியல் பழிவாங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய, மொத்தமாக 5,301 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலான ஆணைக்குழுக்கள் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடாமல் காணாமலாக்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களும், அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதிகளும்:
1.அரச நிதி மோசடி விசாரணை – 662.34 இலட்சம் ரூபா
2.காணாமலானோர் தொடர்பான விசாரணை – 144.56 இலட்சம் ரூபா
3.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – 1,063 இலட்சம் ரூபா
4.ஊழல் எதிர்ப்பு விசாரணை – 350 இலட்சம் ரூபா
5.அரசியல் பழிவாங்கல் விசாரணை – 842 இலட்சம் ரூபா
6.சுங்கத் திணைக்களம் மீதான விசாரணை – 318 இலட்சம் ரூபா
இவ்வாறாக விசாரணைக்காக குழுக்கள் நியமிக்கப்படடதோடு, அவற்றிற்காக நிதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் சார்ந்து அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாமல் காணாமலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் 2022 மே 09 சம்பவம் தொடர்பாக மட்டும் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக தொகையும் வழங்கப்பட்டது. இதனால் முன்னாள் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Post a Comment