மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை நியமிக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
உறுப்பினர் நீதிபதி திருமதி மேனகா விஜேசுந்தர இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதால் அவர் இல்லாத நீதிபதிகள் குழு முன் இந்த மனுவை மே 9 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க இதன்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment