கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் நேற்று பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Post a Comment