கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
இதன்படி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக தண்டிக்கப்படாததற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment