எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய கனிய வளக்கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை என வரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக நாடளாவியரீதியில் நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
Post a Comment