கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
இதற்காக 75 இற்கும் மேற்பட்ட குடியிருப்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படும் தோட்டக் குடியிருப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த தோட்டக் குடியிருப்புகளை சுத்திகரித்து, புனரமைப்பு செய்து, வர்ணம் பூசி சாதாரணமான முறையில் வாழக்கூடிய நிலைமையை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் கூறினார்.
Post a Comment