எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3% கமிஷனை இரத்து செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறிக்கொள்ளும் குழு தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த குழு செயல்படுவதாக முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம் எரிபொருள் விநியோகத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment