உள்ளூராட்மன்றத் தேர்தல் ஊடாக 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 272 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மாநகர முதல்வர்கள், பிரதி முதல்வர்கள், தவிசாளர்கள், பிரதி சவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், வேட்புமனுக்கள் இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் மார்ச் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment