Ads (728x90)


இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜுவா தெரிவித்துள்ளார்.

காணொளி தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பு குறித்து தனது எக்ஸ் கணக்கில் பதிவிடும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவமும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது எக்ஸ் கணக்கில் மேலும் தெரிவித்துள்ளார்


Post a Comment

Recent News

Recent Posts Widget