Ads (728x90)

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹிந்துக் நெத்தி பார்வையிட்டுள்ளார். 

கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அச்சுவேலியில் இயங்கி வரும் மரக்கறி எண்ணை உற்பத்தி செய்யும் நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஊழியர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அனைத்து கைத்தொழில் நிலையங்களையும் மேம்படுத்தி அவற்றின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் குறித்த களப்பணி இடம்பெற்று வருவதாகவும், மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து அனைவரையும் உள்வாங்கி பாரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் குழாமில் கடல்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரிய பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா யாழ்ப்பாண மாவட்ட செயலர் பிரதீபன், கோப்பாய் பிரதேச செயலர் சிவஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget