Ads (728x90)

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை போடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் நேற்றைய தினம் Save a Life நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.இராகுலன் கையளித்தார்.

மாவட்டச் செயலகம் அதனை அண்டிய பகுதியில் வைப்பதற்காக 03 கூடுகளும், மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா ஒன்று வீதம் வைப்பதற்காக 15 கூடுகளுமாக 18 கூடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இக்கையளிப்பு நிகழ்வில் பிரதம பொறியியலாளர் திரு.க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தா்சினி, Save a Life நிறுவன தொழில் நுட்ப முகாமையாளர் திரு.ம. கீதானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றுப் போத்தல்களால் கூடு நிரம்பியவுடன் அதனை குறித்த நிறுவனம் மீள சுழற்சிக்காக எடுத்துச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget