ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வலகு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் செயற்பாடுகளை தடுப்பதாகவும் அலுவலக செயற்பாடுகள், வெளிப்படுத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைய, மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ள உதவும்.
குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். எனவும்
அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வினைத்திறனாக செயல்பட அனைவரது ஒத்துழைப்பும் தேவை எனவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment