கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
நடந்த சில கொலைகள் வெறும் அரசியல் படுகொலைகள் அல்ல, மாறாக சதித்திட்டங்கள் என்றும், சிக்கலான நூல் பந்து இப்போது படிப்படியாக அவிழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மறைக்கப்படட கோப்புகள் குறித்து இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன. வழக்குகள் தொடரப்படுகின்றன. குற்றப் புலனாய்வுத் துறையும் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த வழியில், சட்டத்தால் தேவைப்படும் பணிகள் தொடர்புடைய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நிறுவனங்களுக்குத் தேவையான வசதிகளை மட்டுமே அரசாங்கம் வழங்குகிறது.
மோசடி, ஊழல், கொலை மற்றும் அரசியல் குற்றங்கள் மிகவும் கடுமையானவை, அவை ஒரு வலையமைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக மாறியுள்ளார்.
இந்த நாட்டில் எந்த ஒரு வழக்கிலும் கம்மன்பில சட்டத்தரணியாக முன்னிலையானதை நம் நாட்டு மக்கள் பார்க்கவில்லை. ஆனால் பிள்ளையான் தனது சட்டத்தரணியாக கம்மன்பிலவைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், பிள்ளையான் சம்பந்தப்பட்ட வழக்கை கம்மன்பில எடுத்துக்கொண்டுள்ளார்.
இவை வெறும் அரசியல் படுகொலைகள் அல்ல, மாறாக சதித்திட்டங்கள் என்பதை நாம் காண்கிறோம். அந்த நூல் பந்து அவிழ்ந்து வருகிறது.
பழைய மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக பல நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்னும் சுகாதார அமைச்சில் உள்ளனர். மருந்துகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மருந்துகளை முறையற்ற முறையில் கொளவனவு செய்ததால் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும்.
சரிந்து போன சுகாதாரத் துறையை நாங்கள் மீட்டெடுக்கிறோம். இன்னும் சில மாதங்களில், மக்கள் எதிர்பார்க்கும் விதத்தில் சுகாதார சேவைகளை வழங்க முடியும். “பகட்டான தீர்வுகளுக்குப் பதிலாக நிலையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாம் சுகாதாரத் துறையை கட்டியெழுப்ப வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment