Ads (728x90)

இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய மகளிருக்கான அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனைத்துப் போட்டிகளையும் கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பகல் நேரப் போட்டிகளாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதிபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget