Ads (728x90)

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும் அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் நினைவேந்தலில் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினர்.

இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையிலும் இன்று அன்னைபூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget