Ads (728x90)

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.

"அதிகாரத்தைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரமான செயல் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது," என அவர் நேற்று பொலன்னறுவையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தரை வருடங்களாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கும், அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கும் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நோக்கம் இல்லை என்று அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கு படிப்படியான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget