Ads (728x90)

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரால் இன்று இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 260 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget