Ads (728x90)

காலையில் எழுந்தவுடனே காப்பி குடிக்கவில்லை என்றால் சிலருக்கு அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்காது.

சுமார் ஒரு கப் காப்பியில் (250 மிலி) வைட்டமின் B2, B5, B1, B3, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. இதில், 'கபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்கு அதிகத் தீங்கை விளைவிக்கக்கூடியது.

அதே சமயம் இது நம் மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.

நன்மைகள்:

இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் 'பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன.

இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.

தினமும் 2 கப் காப்பி குடிப்பவர்களுக்கு 14 சதவிகிதம் பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம் என சுவீடனை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் காப்பியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது பாதிப்படைந்த செல்களை புதுப்பித்து, கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமமானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

தீமைகள்:

காப்பியில் உள்ள 'கேஃபஸ்டால்’, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அல்சர் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், காப்பி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது.

மேலும் அதிக அளவில் காப்பி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.

அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காப்பி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காப்பி பருகுவதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget