அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் 2 ஆம் திகதி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.
இதற்கு ஏனைய நாடுகள் பணிந்த நிலையில், சீனா தொடர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக வரியையும் அதிகரித்தது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியையும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியையும் விதிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா தற்போது நிறுத்தி உள்ளது.
இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் இராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment