Ads (728x90)

சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னாரில் இன்று நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. சில வீதிகளை மூட வேண்டியிருந்தது.

தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

மேலும் மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்துக்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மக்களின் கருத்துகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் முன்னெடுப்படும் எனறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget